Header Ads

  • சற்று முன்

    கொரோனா இல்லை என்றால் 14 நாட்கள் தனிமை முகாம்களில் இருக்கத் தேவையில்லை - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்..


    கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றால் அவர்கள் தனிமை முகாம்களில் 14 நாட் கள் இருக்க தேவையில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் 2 ஆயிரத்தை தொட்டுவிடுகிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியது மக்களை மேலும் பீதியடையச் செய்தது. 


    இதுகுறித்து  சுகாதாரத் துறை செயலரும், மாநகராட்சி கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று விளக்கமளித்தார். அதில், “ கொரோனா பரிசோதனை செய்துகொள்வோர், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் 14 நாட்கள் தனிமை முகாம்களில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். ஒருவரை பரிசோதனை செய்து,முடிவு வரும் வரை, அவர் தொற்றுஉடையவராக இருந்தால் பலருக்கு கொரோனா வைரஸை பரப்புவார். அதைத் தடுக்கவே இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

    பரிசோதனையில் தொற்று இல்லை என தெரியவந்து, அவருக்கு அறிகுறி இல்லாத நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி இருந்தால், 14 நாட்கள் தனிமை முகாம்களில் இருக்க தேவையில்லை. ஒருவேளை ஒருவருக்கு பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என வந்துவிட்டாலும், அவருக்கு அறிகுறி இருந்தால் கட்டாயம் 14 நாட்கள் தனிமை முகாம்களில் இருக்க வேண்டும். ” என்று கூறினார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad