அம்பத்தூர் வீட்டுவசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு 1450 வீடுகள் கொரோனா வார்டாக மாற்றம்
அம்பத்தூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள 1450 அடுக்கு மாடி குடியிருப்புகளை தற்காலிக கொரோனா வார்டாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அம்பத்தூரில் ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக கூறினார். சென்னை மாநகராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதில் கோரோனா அறிகுறிகள் உள்ளவர்களை 4 பிரிவுகளாக பிரித்து அதில் மூச்சு திணறல் பிரச்சினை இருந்தால் அவர்களை உயர் வசதி கோண்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும், அடுத்து மருத்துவ கண்காணிப்பு தேவை என்பவர்களை சுகாதாரத்துறை கீழ் இயங்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தார். அடுத்து அறிகுறிகள் குறைந்து காணப்படுபவர்களை அறிகுறிகள் இல்லாதவர்களை கொரோனா கேர் வார்டில் அனுமதித்து கண்காணிக்கப்படுவதாக கூறினார். 55 மையங்களில் 17500 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா கேர் வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3200 நோயளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
No comments