வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி...
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. முதல் கட்டமாக மே 3 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, மே 17 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு 3, 4 என நீட்டிக்கப்பட்டு தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வழிபாட்டுத் தளங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்கள் தேவையின்றி பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக
மும்பை, டெல்லி, சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது. மும்பையில் ஒரு லட்சத்தை கடந்துள்ளது.தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இத்தகைய சூழலில் வரும் 16
மற்றும் 17-ம் தேதிகளில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதுவரை மாநில முதல்வர்களுடன் 5 கட்டங்களாக காணொலி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் லாக்டவுன் தளார்வுகள், வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments