Header Ads

  • சற்று முன்

    1967 ல் சீன வீரர்கள் 300 பேரை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்

    இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே கடந்த திங்கட்கிழமையன்று எல்லையில் நடந்த மோதல் இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதே போன்றதொரு மோதல் சம்பவம் 1967-ம் ஆண்டிலும் நிகழ்ந்தது. அப்போது என்ன நடந்தது?

    1967-ம் ஆண்டு இந்தியாவின் சிக்கிம் மற்றும் சீனாவின் திபெத் எல்லையில் உள்ள நாதுலா கணவாயில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 300 சீன ராணுவத்தினரும், 65 இந்திய ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.


    1962 போருக்குப் பின்னர் இந்தியாவும் சீனாவும் தங்களது தூதர்களைத் திரும்ப அழைத்துக்கொண்டன. இருப்பினும் சிறிய குழுக்கள் மட்டுமே இரு நாட்டுத் தூதரகங்களிலும் பணியாற்றின. இந்தநிலையில், இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் நாட்டை உளவு பார்ப்பதாகச் சீனா குற்றஞ்சாட்டியது.

    அத்துடன், பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தைச் சுற்றி வளைத்த சீன காவல்துறையினர், ஊழியர்கள் உள்ளே செல்வதையும், வெளியே வருவதையும் தடுத்தனர். பதிலுக்கும் இந்தியாவும் சீன தூதரகத்தை அதே போன்று மூடியது. 
    1967இல் இந்திய - சீன ராணுவத்தினர் நேருக்கு நேர் மோதினர்.
    தூதரக பிரச்சனைகள் 1967-ம் ஆண்டு நடந்துகொண்டிருக்கும்போது, மற்றொரு பிரச்சனையும் வந்தது. தங்கள் நாட்டு எல்லையிலிருந்து 800 ஆடுகளை இந்திய ராணுவத்தினர் திருடிச் சென்றுவிட்டதாகச் சீனா குற்றஞ்சாட்டியது.

    அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜன சங்கத்தின் சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அடல் பிகாரி வாஜ்பேயி, டெல்லியில் உள்ள சீன தூதரகத்துக்கு ஆடுகளை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தினார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad