சாத்தான்குளம் "லாக்கப் டெத்"தைக் கண்டித்து 26ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடையடைப்பு - விக்ரமராஜா அறிவிப்பு
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) சிறையில் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் கொடூரமாகத் தாக்கியதால்தான் அவர்கள்
உயிரிழந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ”தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை மகன் இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிந்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
அந்த அரக்க செயலைக் கண்டித்து 26ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடையடைப்பு நடத்துவதென்றும், 30ஆம் தேதி அனைத்து காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக மருத்துவச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர், குற்றவாளிகளை நேரில் பார்க்காமல் சிறைக்கு அனுப்பிய நீதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கோண்டுள்ளார்.
No comments