Header Ads

  • சற்று முன்

    மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசிக்கு 27 சதவீதம்: மத்திய அரசு. ஸ்டாலின் வரவேற்பு


    சென்னை: மருத்துவ மாணவர் படிப்புக்கான சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27% இடஒதுக்கீடு வழங்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என்கிற கருத்தையும் உச்சநீதிமன்றம் கூறியது.

    அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த அறிவுறுத்தலின் பேரில் இந்த கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடின.

    இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி போராட்டத்தில் தி. மு. க. கிடைத்த மேலும் ஒரு வெற்றி என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad