பண்ருட்டி அருகே பிளாஸ்டிக் துப்பாக்கி தயார் செய்த 3 பேர் கைது
பண்ருட்டி அருகே பிளாஸ்டிக் துப்பாக்கி தயார் செய்து முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல்(20) சிவபிரகாசம்(25) வினோத்(20) என்ற வாலிபர்கள் "யூ டியூப்" பார்த்து பிளாஸ்டிக் துப்பாக்கி தயாரித்துள்ளார். அதன் மூலம் முயல் வேட்டையாடியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்பொழுது அப்போது அவர்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கிகளை தயார் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments