திருவள்ளூர் :வட மாநில தொழிலாளர்கள் 30 பேரை சொந்த ஊருக்கு திமுக நிர்வாகி அனுப்பி வைத்தார்.
திருவள்ளூர் : வடமாநிலத்தை சேர்ந்த 30 பேரை தி. மு. க.நிர்வாகிகள் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள பாடியநல்லூரில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 30 பேர் வேலை இல்லாமலும், உணவு கிடைக்காமலும் தவித்து வந்தனர். அதனை அறிந்த சோழவரம் ஒன்றிய தி. மு. க. செயலாளர் கருணாகரன், ஊரடங்கால் தவித்து வந்த வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை மற்றும் மருத்துவ பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து தனியார் பேருந்தில் 30 பேரையும் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். தி. மு. க. நிர்வாகி வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
No comments