திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா 3000 நெருங்குகிறது.
சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை ஒட்டியுள்ள மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஆவடியில் 19, சோழவரத்தில்14 உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று வரை கரோனா பாதிப்பு 2,819 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 91 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,917 ஆக உயர்ந்துள்ளது.
No comments