சென்னை : ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் 420 வீரர்களுக்கு பணிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை அடுத்த ஆவடியில் உள்ள விமான படை மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலம் மற்றும் நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் 420 பேர் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களுக்கு ஆட்டோ மொபைல், ஆட்டோ மொபைல் டெக்னிசியன், விமான போக்குவரத்து மெக்கானிக் பயிற்சி, விமான காவல் படை, பாதுகாவலர் பயிற்சி என பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
52 வாரம் பயிற்சி பெற்று வந்த அவர்களுக்கு ஆவடி விமான படை மைதானத்தில் பரிசுகள் வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆவடி விமானப்படை கமாண்டர் தினேஷ் சிங் டாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
No comments