உலகளவில் 4.80 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு..
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது முழுவதும் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 92 லட்சத்து 47 ஆயிரத்து 342 பேர் இந்த ஆட்கொல்லி வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவிலிருந்து 49 லட்சத்து 82 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4 லட்சத்து 79 ஆயிரத்து 777 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள்:
நாடுகள் | பாதிப்பு | குணமடைந்தோர் | உயிரிழப்பு |
அமெரிக்கா | 23,94,579 | 10,03,322 | 1,23,473 |
பிரேசில் | 11,13,606 | 5,94,104 | 52,771 |
இங்கிலாந்து | 3,06,210 | - | 42,927 |
ஸ்பெயின் | 2,93,584 | - | 28,325 |
இத்தாலி | 2,38,720 | 1,83,426 | 34,675 |
ரஷ்யா | 5,99,705 | 3,56,426 | 8,359 |
பெரு | 2,57,447 | 1,45,320 | 8,223 |
இந்தியா | 4,40,215 | 2,48,189 | 14,011 |
மொத்தம் | 92,47,342 | 49,82,895 | 4.79, 777 |
No comments