சென்னை ஆவடி அருகே வீராபுரத்தில் 9 லட்சம் ரூபாய் 8 பவுன் நகை கொள்ளை :போலீஸ் விசாரணை
சென்னை ஆவடி அருகே வீராபுரத்தில் உள்ள தாமரை நகர் பகுதியில் பிளம்பர் வேலை பார்த்து வருபவர் நாகலிங்கம். இவர் வழக்கம்போல் நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தோடு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
காலையில் தூங்கி எழுந்து கீழை இறங்கி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ஏழரை பவுன் தங்க நகை மற்றும் 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்து தெரியவந்தது. இதுகுறித்து நாகலிங்கம் ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு போட்ட முதல் நாளிலே நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
No comments