ஜூன் 19 முதல் 4 மாவட்டங்களில் ஊரடங்கு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. சென்னை அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடத்திய முதலமைச்சர் பழனிசாமி மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். அப்பொழுது மருத்துவக் குழுவினர் நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கிற்கு பரிந்துரை செய்துள்ளது. மருத்துவக் குழுவின் ஆலோசனையின் படி முதலமைச்சர் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார்.
இந்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி கடைகள், பெட்ரோல் பங்கு, மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் 2 மணி வரை இயங்கும். கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். வாகனங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. டீ கடைகள் திறக்க அனுமதி இல்லை. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 12 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.
No comments