பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்; 2 நாளில் வந்துவிடுவேன்: ஸ்டாலினிடம் கடைசிப் பேச்சு
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஜெ.அன்பழகன் தனது 62-வது
பிறந்த நாளில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மறைந்த திமுக தலைவர்
கருணாநிதியின் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு சிகிச்சைக்குச் செல்வதாகக்
கூறியிருந்தார். ஆனால், மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ம் தேதி அன்று 2
நாளில் வந்துவிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் சொல்லிவிட்டு
சிகிச்சைக்குச் சென்றவர் சடலமாகத்தான் திரும்பினார்.
கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கட்சிப் பணியில் ஜெ.அன்பழகன்
தீவிரம் காட்டி வந்தார். பொதுமக்களை நேரடியாக சந்தித்து நிவாரண உதவிகள்
வழங்குவது, 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில் பயனாளிகளுக்கு உதவி செய்வது போன்ற
செயல்களில் ஈடுபட்டு வந்ததை உடன்பிறப்புகள் சொல்லிச் சொல்லிக்
கலங்குகின்றனர்.
No comments