Header Ads

  • சற்று முன்

    கொரோனா பரிசோதனை என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு..


    சென்னையை அடுத்த ஆவடியில்  கொரோனா பரிசோதனை என்ற பெயரில் தனியார் வாகனத்தில் அழைத்து சென்று உணவு கொடுக்காமல் அலைகழிக்க விட்டதாக புகார்.

    ஆவடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பட்டாபிராம், சேக்காடு, காமராஜர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து 19 நபர்களை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அழைத்து செல்லப்பட்டவர்களின் வீடுகளில் உள்ள ஒவ்வொருத்தரின் உறவினர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அவர்களை சோதனை செய்வதற்கு அழைத்து சென்று ஆனால் அவர்களுக்கு சோதனை செய்யாமல் அவர்களை தனிமை படுத்தபோவதாக திருவள்ளூர் அருகே உள்ள சட்டக்கல்லூரி மைதானத்தில் இறக்கி விட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
    வேனில் அழைத்து செல்லப்பட்ட 19 பேரையும் மீண்டும் அவர்களின் வீட்டிற்கே கொண்டுவந்து விடப்போவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad