திருவள்ளூரில் இ பாஸ் வழங்க லஞ்சம் கேட்ட இருவர் கைது.
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்கிற வாகன ஓட்டுனர் திருப்பதி சென்று வருவதற்கு இ.பாஸ் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு இ பாஸ் கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் ஜெகதீஷ் , தினேஷ் ஆகிய இருவரையும் அணுகினார்.
அவர்களோ 2500 ரூபாய் பணம் கொடுத்தால் இ-பாஸ் பெற்றுத்தருவேன் என்று கூறியுள்ளனர். லஞ்சம் கொடுக்க மறுத்து திருவள்ளூர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஜெகதீஷ் , தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments