Header Ads

  • சற்று முன்

    கிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..



    'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அதிகாரிக்கு, தி.மு.க., எம்.பி, கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 800 மாணவர்கள் பிஷ்கெக்கில் (கிர்கிஸ்தான்) சிக்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். பிஷ்கெக்கில் மருத்துவப் படிப்பைமுடித்த அவர்கள் தமிழகத்துக்கு திரும்ப முடியாததால் இந்தியாவில் மருத்துவர்களாக பயிற்சி பெறுவதற்கான தேர்வுகளை எழுத முடியாத நிலையில் உள்ளனர்.”

    மேலும், “விடுதிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அவர்களை அழைத்துவர பிஷ்கெக்கில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சென்னைக்கு சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும்”  என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad