Header Ads

  • சற்று முன்

    பட்டாபிராமில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த போலி நிருபர் கைது

    சென்னை புறநகரில் பத்திரிக்கையாளர் போர்வையில்  தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    சென்னை அடுத்த அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் நீண்ட நாட்களாக திணறி வந்தனர்.  இந்நிலையில் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தனது இருசக்கர வாகனம் திருட்டு போய் விட்டதாக காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார்.  இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் அரவிந்தன் செல்போனுக்கு,  தங்களது வாகனத்திற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. 

    அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ஆவணங்கள் இல்லாமல் சிக்கிய, சென்னை பாடியைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் பட்டாபிராம் நவஜீவன் பகுதியை சேர்ந்த நரேஷ் என்கிற விக்டர் என்பவரிடம் இந்த இரு சக்கர வாகனத்தை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.. அதன் பேரில்  விசாரணை நடத்தியதில், தன்னை பத்திரிக்கையாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு விக்டர் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடியதும்,  அதனை குறைந்த விலைக்கு விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad