Header Ads

  • சற்று முன்

    பெட்ரோல், டீசல் விலையேற்றம் மனசாட்சி இல்லாத அரசாங்கம்

     

    உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவில் இருக்கும் போது இந்தியாவில் மட்டும் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலையைத் தீர்மானிப்பவை எவை ?

    கச்சா எண்ணெய் விலை, எண்ணெயின் சுத்திகரிப்பு செலவினங்கள், சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபம், மத்திய மாநில அரசாங்கங்கள் விதிக்கும் கலால் மற்றும் வாட் வரி ஆகியவற்றைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து மதிப்புகளின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படும் விலையை தனிமனிதன் விலையாக செலுத்தி பெட்ரோல்,டீசலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    கலால் வரி என்பது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அரசாங்கம் விதிக்கும் வரி, அந்த வரியை நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

    VAT என்பது மதிப்பு கூட்டு வரி. இது ஒரு பொருளின் மீது உற்பத்தியின் வெவ்வேறு கட்டங்களில் விதிக்கப்படும் வரி. இந்த இரண்டு வரிகளும் அரசாங்கத்தின் முக்கிய நிதி மூலாதாரமாக விளங்குகின்றன. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் சில்லறை விற்பனை விலை அதிகரிக்கிறது. கடந்த ஜனவரி 30ம் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 57 டாலர்களாக இருந்தது, இன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 40 டாலர்களாக குறைந்துள்ளன. ஆனால் வரி அதிகரிப்பால், தற்போது பெட்ரோல் டீசல் சில்லறை விற்பனை விலை அதிகரித்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விற்கப்படும் விலையில் 70 சதவீதம் வரி மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

    ஏன் விலை அதிகரித்துள்ளது? இந்த கேள்விக்கான பதிலை மிகவும் எளிதாக கூறிவிடலாம். மத்திய மாநில அரசுகள் வருமானத்திற்கு பெட்ரோல் டீசல் விற்பனை மீதான வரியை பெரிதும் நம்பி இருக்கிறது. நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் சரிந்துள்ள நிலையில், ஏரி பொருள் மீதான வரி விதிப்பே அரசாங்கத்தின் பெரும் நிதி ஆதாரமாக கருதப்படுகிறது. 

    இந்த விலை உயர்வு பணவீக்கத்திற்கு வழிவகுக்குமா? கண்டிப்பாக. பெட்ரோல் விலை உயர்வால் வணிகத்தில் மாற்றம் இருக்காது. ஆனால் டீசல் விலை உயர்வால் வணிகம் பாதிக்கப்படும். சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் டீசலைப் பயன்படுத்துகின்றன, இதனால் அதிக விலைகளை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். நுகர்வோருக்கு அழுத்தம் அதிகரிக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டுமே பணவீக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார நிலைமையை வைத்து பார்க்கும்போது, இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தனிமனிதனின் அன்றாட செலவினங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    மலரில் இருந்து வண்டு தேன் எடுப்பதைப் போல் மக்களிடம் வரியை வசூலிக்க வேண்டும் என்றார் ராஜாஜி. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மக்களை துன்புறுத்தி வரியை வசூலிக்கிறார்கள்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad