Header Ads

  • சற்று முன்

    ஆவடியில் கொரோனா பரிசோதனை மையம். திமுக.மாவட்ட செயலாளர் சா. மு. நாசர் கோரிக்கை




    ஆவடியில் கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தனிமை படுத்துதல் முகாம் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதாக தி. மு. க. கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

     ஆவடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்து செல்கிறது. 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

    ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள், திருநின்றவூர் பேரூராட்சி, திருவேற்காடு நகராட்சி என்று ஏராளமான நகர்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 
    கொரோனா நோயாளிகளுக்கு போதுமான மருத்துவர்களும் இல்லை. மருத்துவ வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். 

    இந்நிலையில் தி. மு. க. கூட்டணி கட்சியினர் சார்பில் திருவள்ளூர் மாவட்ட (தெற்கு) தி. மு. க. செயலாளர் ஆவடி சா. மு. நாசர், ம. தி. மு. க. மாவட்ட துணை செயலாளர் அந்திரிதாஸ்  ஆகியோர் ஆவடி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில்  கொரோனாவால் பாதிப்படைந்தவர்களை தனிமை படுத்துவதற்கு திருத்தணி, திருவேலாங்காடு என்று  50  கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் அழைத்து சென்று அலைகழிக்கப்படுகின்றனர். அதனால் ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் தனிமை படுத்தும் முகாம் அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல் ஆவடியில் கொரோனா பரிசோதனை மையம் இல்லாமல் பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 4500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அதனால் ஆவடி பகுதியில் கொரோனா பரிசோதனை மையம் அமைத்து பொதுமக்களை  முன்னெச்சரிக்கையோடு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு உடனடியாக எடுத்து சென்று நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad