Header Ads

  • சற்று முன்

    பூவிருந்தவல்லியில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்க தடை

    பூவிருந்தவல்லியில் ஊரடங்கு காலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் வசந்தி தெரிவித்துள்ளார். 

    திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சியில் பகுதியில் வசிப்பவர்கள் நாளை முதல் அத்தியாவசிய காரணமின்றி இருசக்கர வாகனத்தில் பயணிக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும். சென்னைக்கு சென்று தொழில்புரிபவர்கள் நகராட்சியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார். 

    மேலும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளவரை இறைச்சிக் கடைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. காய்கறிகள், மளிகை, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மேல் திறந்திருக்கும் கடைக்கு சீல் வைக்கப்பட்டும் என ஆணையர் வசந்தி எச்சரித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad