Header Ads

  • சற்று முன்

    கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது என்ன? -சீனா விளக்கம்.


     20 ஜூன் 2020

    இந்தியா - சீனா இடையே எல்லை தொடர்பாக நீடித்து வரும் சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்தில் நடந்த இரு நாட்டு வீரர்கள் இடையிலான மோதல் குறித்த விவரங்களை சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியானிடம் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அவர் விரிவாக பதில் அளித்தார். அதன் விவரம்:

    பல ஆண்டுகால பிரச்சனை
    சீனா-இந்தியா எல்லையின் மேற்குப் பகுதியில் அசல் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஏ.சி.) சீன பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக, சீன எல்லைப் படைகள் இந்த பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு ஏப்ரல் முதல், இந்திய படையினர் ஒருதலைபட்சமாகவும் தொடர்ச்சியாகவும் அந்த பகுதியில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற வசதிகளை கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள எல்.ஏ.சி. பகுதியில் கட்டி வந்ததாகவும், அது தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் சீனா தனது ஆட்சேபங்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.

    ஆனால் இந்திய படையினர் எல்.ஏ.சி. பகுதியில் முன்னேறி வந்ததுடன் பல ஆத்திரமூட்டல் செயல்களில் ஈடுபட்டார்கள்.

    கடந்த மே மாதம் 6-ஆம் தேதி அதிகாலையில, எல்.ஏ.சி. பகுதியை இரவிலேயே கடந்து வந்திருந்த இந்திய படையினர், சீன பிராந்தியத்துக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், தடுப்புகளையும் மணல் அரண்களையும் கட்டியபோது, அதை சீன ரோந்துப் படையினர் தடுத்தார்கள்.

    முதலில் அடித்தது யார்?
    அப்போது வேண்டுமேன்றே ஆத்திரமூட்டும் செயல்பாடுகளில் ஈடுபட்ட இந்திய படையினர், தன்னிச்சையாக அந்த பகுதியின் கட்டுப்பாட்டு நிலையை மாற்றி, அதை நிர்வகிக்க முற்பட்டார்கள். இதனால், களத்தில் உள்ள நிலைமைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கை எடுத்து எல்லை பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கட்டாயத்துக்கு சீன படையினர் தள்ளப்பட்டார்கள்.

    (ஆதாரம் BBC-தமிழ்)

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad