மீஞ்சூரில் கொரோனா நோயாளி உயிரிழப்பு. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேற்று மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை அடுத்த மீஞ்சூரை சேர்ந்த கொரோனா நோயாளி கடந்த 9 ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சையில் இருந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட சென்னை அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments