சாத்தான்குளம் நீதிமன்ற காவலில் உயிரிழந்த தந்தை மகன் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக கனிமொழி எம். பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தந்தை மகன். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்றக் காவலில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமோழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், தந்தை மகன் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும். கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு சம்பவம் நடந்த அன்று மாநில காவல்துறை தலைவர் திரிபாதியை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார் என்பது குறிப்பிட தக்கது.
No comments