கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டுவந்த பெண்.. கண்டுகொள்ளாத அரசு.. உதவிக்கரம் நீட்டிய மு.க. ஸ்டாலின்..
சென்னை அம்பத்தூரில் கொரோனா தொற்று ஏற்பட்டும் , முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை அம்பத்தூர் 7வது மண்டலத்தை சேர்ந்த பாடியில் வசித்து வரும் பெண் ஒருவர் கடுமையான தலைவலி, சலி போன்ற கொரோனா அறிகுறியால் தவித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு 2 நாட்களாகியும் அவருக்கு, மாநகராட்சி சார்பிலும், சுகாதாரத்துறை சார்பிலும் எவ்வித உதவியும் அளிக்கப்படவில்லை என வேதனையுடன் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார். மேலும் அரசு தமக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர் வீடியோவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
நேற்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மேலும் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். அதோடு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு மற்றும் இளைஞரணி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் எம்.டி.ஆர்.நாகராஜன் ஆகியோர் மூலம் அப்பெண்ணுக்கு தேவையான மருந்து பொருட்களையும் வழங்கினார்.
No comments