Header Ads

  • சற்று முன்

    இ-பாஸ் இல்லாதவர்களுக்கு சென்னைக்குள் அனுமதி இல்லை. செங்கல்பட்டு மாவட்ட போலீசார் தகவல


    இ பாஸ் இல்லாதவர்களுக்கு சென்னைக்குள் அனுமதி இல்லை. 

    செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை நடவடிக்கை. 

    சென்னை : வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் தேவை என்று செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 40 ஆயிரத்து 698 பேர் பாதிப்படைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 924 என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களையும் இணைத்து ஒரு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல கூடியவர்களும் அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடியவர்களும் இ பாஸ் இல்லாமல் வந்தால் திருப்பி அனுப்பப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு டோல்கேட் அருகே மிகப்பெரிய தடுப்பு அமைத்து காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வாகனங்களில் வருபவர்களிடம் இ பாஸ் இருக்கிறதா? என்று கேட்டு, பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பு குறையும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad