Header Ads

 • சற்று முன்

  கொரோனா அரசியல்

  இலசை. கணேசன். 


  கொரானா நோய்த் தொற்றிலும் அரசியலா? என்ற கேள்வி உடனே எழுகிறது.

  கொரானாவுக்கு அரசியல் பேதம் இல்லைதான். ஆனால் கொரானாவை எதிர்கொள்ளும் ஆட்சியாளர்களுக்கு அரசியல் உண்டு.

  சமூகம் இரண்டு வர்க்கங்களாக பிளவுண்டு இருக்கிறது. முரண்பட்ட இந்த இரு வர்க்கங்களுக்கு இடையே நடக்கும் வர்க்கப் போராட்டமே அரசியல். எல்லாவற்றிலும் இந்த அரசியல் பிரதிபலிக்கும். கொரோனாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

  * அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
  * இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
  * தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.

  இந்த மூவருக்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருக்கிறது.

  'கொரானா' என்ற கண்ணுக்குத் தெரியாத ஓட்டு உயிரி வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு உலகையே அச்சுறுத்துகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த, எதிர்த்துப் போராடுவதில் டிரம்ப், மோடி, எடப்பாடி ஆகிய மூவருக்கும் உள்ள ஒற்றுமை வெளிப்பட்டுள்ளது.

  கொரானா பரவல் குறித்து அமெரிக்க உளவுத்துறை, சுகாதாரத்துறை, பாதுகாப்பு கவுன்சிலின் பயோ டிபன்ஸ் பிரிவு மற்றும் டிரம்பின் முக்கிய ஆலோசகர் பீட்டர் நாவாரோ ...என்று முக்கிய இடங்களில் இருந்து முறையான அபாய எச்சரிக்கை உரிய நேரத்தில் டிரம்புக்கு வந்தது.

  இதற்கு டிரம்ப் கூறிய பதில்! நாங்கள் உலகின் வல்லரசு. கொரானா தொற்றுக்கு அஞ்சமாட்டோம்". என்று வீர வசனம் பேசினார்.

  " கொரானா நோய் காய்ச்சல் போன்றதுதான்! அது வந்தது போல் தானாகப் போய்விடும். " என்று அலட்சியப் படுத்தினார்.
  " கிருமி நாசினியை உடலுக்குள் செலுத்தி கொரானா பரவலை தடுக்கலாம்." என்று தனது அறிவியல் அற்ற முட்டாள் தனத்தை காட்டினார்.

  நோய் பரவல் பற்றி கவலைப் படாமல் இந்தியாவுக்கு விஜயம் செய்தார்.
  உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை மதிக்கவில்லை.
  கொரானா பரவலை அடக்கத்  தவறியதால் கொரானா அமெரிக்காவை ஆட்டிப்படைக்கிறது. தனது இயலாமையை, தோல்வியை மறைக்க சீனா மீதும்,  உலக சுகாதார நிறுவனம் மீதும் பழி போட்டுத் தப்பிக்கத் துடிக்கிறார்.

  இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உட்பட எதிர்க் கட்சிகள் கொரானா பரவல் அபாயம் குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்தனர்.

  உலக அளவில் 4000 க்கும் அதிகமானோர் பலி. பெரும்பாலான நாடுகள் பாதிப்பு. இந்தியாவிலும் நுழைந்து விட்டது. 73 பேருக்கு தொற்று உறுதியாகிவிட்டது. கர்நாடகாவில் ஒருவர் பலி. இந்தச் சூழலில் பிப்ரவரி மாதமே எச்சரிக்கை செய்யப்பட்டது.

  மோடி சொன்ன பதில் என்ன?

  " இந்தியாவை கொரானா பாதிக்காது! கொரானா பரவலுக்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை! " என்று வீராப்பு பேசினார்.

  2020 பிப். 14ல்." இந்தியாவில் கொரானா பெரிய அளவில் பரவவில்லை. பிரதமர் அலுவலகம் நேரடியாகக் கண்காணித்து வருகிறது. கொரானா  வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் ". என்று கூறியதுடன் எதிர்கட்சிகளின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தார் மோடி. இத்துடன் நிற்கவில்லை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக கிண்டலடிக்கப்பட்டார்.
  கைகளைத் தட்டுங்கள்! விளக்கு ஏற்றுங்கள்!  என்று அறிவியலுக்குப் புறம்பாக மோடி பேசினார்.

  டிரம்ப் வழியில் மோடியும் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை.
  'நாமஸ்தே டிரம்ப்' என்ற வரவேற்பிலும் , ம.பி.யில் ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைவதிலும் மோடி குறியாக இருந்தார்.

  கொரானாவிடம் மோடி மஸ்தான் ஜம்பவம் பலிக்கவில்லை.  இந்தியாவை மிரட்டி வருகிறது. மோடி தனது இயலாமையை, தோல்வியை மறைக்க டெல்லியில் நடைபெற்ற முஸ்லீம்களின் தப்லிக் மாநாட்டின் மீது பழியைப் போட்டார். டெல்லி மாநாட்டை  தடுக்கும் அதிகாரம் மோடி கையில்தான் இருந்தது என்பதை மோடி மறைத்தார்.
  டிரம்பை பின்பற்றி சீனாவின் 'ரேபிட் ஹிட் ' என்ற கொரானா பரிசோதனைக் கருவிகளை மோடி குறை கூறினார்.

  தமிழ்நாடு முதல் அமைச்ர் எடப்பாடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கொரானா பாரவல் அச்சுறுத்தல் குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்தன.

  தமிழ்நாடு சட்டசபையில் திமுக சார்பில் துரைமுருகன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுந்து கொரானா பரவல் குறித்து மக்களிடம் அச்சம் நிலவுகிறது என்று பேசினார்.

  எடப்பாடி என்ன பதில் சொன்னார்?

  "தமிழ்நாட்டுக்குள் கொரானா வராது! வந்தாலும் அதனால் எந்த ஆபத்தும் வராது " என்று எடப்பாடி வீராப்பு பேசினார்.

  துறைமுருகனுக்கு 65 வயதாகிவிட்டது. எனவே கொரானா பயம் வந்துவிட்டது. அவர் அச்சப்படத் தேவையில்லை. என்று ஏளனம் செய்தார். 
  "மூன்று நாளில் முடிவுக்கு வந்துவிடும்.
  என்று ஆரூடம் சொன்ன எடப்பாடி பின்பு கொரானாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்" என்றார். 

  கடைசியில் "கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கித்தான் தெரியும்" என்று அறிவியலுக்குப் புறம்பாகப் பேசுகிறார்.

  தனது இயலாமையை தோல்வியை மறைக்க மோடியைப் பின்பற்றி எடப்பாடியும் தப்லிக் மாநாட்டின் மீது பழியைப் போட்டார். இதற்கு தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மீது பலி போட்டார்.

  சீனாவிடமிருந்து ரேபிட் ஹிட் பரிசோதனை கருவிகளை தனியார் ஏஜன்ஸி மூலம் அதிக விலை கொடுத்து வாங்கியதில் ஊழலில் அகப்பட்டார்.

  அலட்சியம்! இகழ்ச்சி!  இறுமாப்பு! ஏளனம்! அறிவியலுக்கு புறம்பானவை, அடுத்தவர் மீது பழி போட்டு தப்பித்தல்...

  போன்றவற்றில் டிரம்ப், மோடி, எடப்பாடி ஆகிய மூவருக்கும் என்னே ஒற்றுமை!  

  இந்த ஒற்றுமை எப்படி?  எங்கிருந்து வருகிறது?

  கார்ப்பரேட் முதலாளித்துவ ஆதரவு என்பதுதான் இந்த மூவருக்குமான பொருளாதார மற்றும் அரசியல் உறவு. மூவரின் கடிவாளங்களும் கார்ப்பரேட்டுகளிற் கைகளில் காப்பரேட்டுகளின் கைநீட்டலுக்கு கட்டுப்படுபவர் டிரம்ப். டிரம்பின் தாளத்திற்கு ஆடுபவர் மோடி! மோடியின் மகுடிக்கு தலையாட்டுபவர் எடப்பாடி!

  மூவருக்கும் உள்ள கார்ப்பரேட் ஆதரவு உறவு அரசியல் இல்லையா? இந்த அரசியல் கொரானாவை எதிர் கொள்வதில் பிரதிபலிக்காதா?

  கண்டிப்பாக பிரதிபலிக்கும்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad