நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மது கடத்தல்..
சென்னை அருகே நடிகை ரம்யாகிருஷ்ணன் வந்த காரில் மதுப்பாட்டில்கள் கடத்தப்பட்டது தொடா்பாக ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சென்னையில் மதுக் கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சென்னையைத் தவிா்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னைக்குள் மதுபாட்டில்கள் கடத்திவரும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் தடுக்கும் வகையில் சென்னைக்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
அவ்வாறு கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில், சென்னை நோக்கி வரும் வாகனங்களை கானத்தூா் காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் வந்த காரும் சோதனை செய்யப்பட்டது. அதில் அந்த காரில் 96 பீா் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கார் ஓட்டுநர் செல்வக்குமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். பின்னர் சிறிது நேரத்தில் காா் ஓட்டுநா் செல்வகுமாரை நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜாமீனில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
No comments