Header Ads

  • சற்று முன்

    ஆர். எஸ். பாரதிக்கு எதிரான மனு தள்ளுபடி : உயர்நீதிமன்றம் அதிரடி

    ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்துசெய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

    பட்டியலின மக்களை விமர்சித்துப் பேசியதற்காக மே 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி பின்னர் ஜாமீன் விடுவிக்கப்பட்டார். ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
     
    இதனை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.பாரதியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியிருப்பதால், ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜாமீனை ரத்துசெய்ய எந்தக் காரணமும் இல்லை. விரோதப்போக்குடன் மாநில அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது” என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

    இவ்வழக்கில் இன்று (ஜூன் 23) தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ்குமார், ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்ததுடன், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவி

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad