Header Ads

  • சற்று முன்

    ஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...


    ஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்., 4ம் தேதி, டில்லி சென்று திரும்பிய, ஆவடி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முதியவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.

    அதைத் தொடர்ந்து, தினமும் ஒருவர், இருவர் என, துவக்கத்தில் குறைவான நபர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது, சென்னையின் மற்ற பகுதிகளை போல், ஆவடியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல், பட்டாபிராம், ஆவடி காமராஜர் நகர், பருத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக, தினமும், 20க்கும் மேற்பட்டோர், தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை, 670 ஆக உயர்ந்தது. சிகிச்சை பலனின்றி, 25 பேர் உயிரிழந்துள்ளனர். 

    மேலும், ஆவடி பகுதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் தகவல்கள், மாநகராட்சிக்கு சரிவர கிடைப்பதில்லை என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இதனால், நோய்த் தொற்றுக்கு பிந்தைய நடவடிக்கையில், அதிகாரிகளால் சரிவர ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இப்பிரச்னைக்கு, சுகாதார அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad