Header Ads

  • சற்று முன்

    ஆவடி அருகே சமூக இடைவேளியுடன் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது

    சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில் சமூக இடைவெளியுடன் உறவினர்கள் மட்டும் கலந்துக்கொண்ட திருமணம் நடைபெற்றது. 

    பட்டாபிராமில் உள்ள மதுசூதனன் - பணிபால தம்பதியின் மகள் வித்யாதாரி என்ற பெண்ணிற்கும், திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டைச் சேர்ந்த (லெட்) ஜெயச்சந்திரன் ரெட்டி - தனலட்சுமி அவர்களின் மகன் ஜெய்க்குமார் என்பவருக்கும், ஆவடி அடுத்த பட்டாபிராம் கோபாலபுரத்தில் உள்ள கமல விநாயகர் ஆலயத்தில் சமூக இடைவெளியுடன் புதன் கிழமை காலை திருமணம் நடைபெற்றது. 

    ஊரடங்கு அமலில் இருப்பதால் மணமக்கள் இரு வீட்டின் உறவினர்கள் 30க்கும் குறைவானோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் அரசு அறிவுரைத்தலின் படி அனைவரும் மாஸ்க் அணிந்து தம்பதியை வாழ்த்தினர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad