Header Ads

  • சற்று முன்

    திருவள்ளூர் : இ-பாஸ் இல்லை என மின்வாரிய ஊழியரை தாக்கிய காவலர்..



    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காவல் துறையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் திருவள்ளூர்  அடுத்த வேப்பம்பட்டு சோதனை சாவடியில் திருவள்ளூர்  மாவட்ட துணை கண்காணிப்பளர்  சேகர் தலைமையில்,  50க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


    வழக்கமாக இ- பாஸ் இல்லாவிட்டாலும் அரசு ஊழியர்கள்  தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பணிக்குச் செல்வர். ஆனால் நேற்று மின்வாரிய ஊழியர் ஒருவர் இ-பாஸ் இல்லாமல் ஆவடி நோக்கி வந்துள்ளார். அப்போது சோதனைச் சாவடியில் அவருடைய அடையாள அட்டையைக் காண்பித்தும் காவல் துறையினர் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது காவலர் மின்வாரிய ஊழியரை தாக்கி கீழே தள்ளியுள்ளார்.

    இந்த சம்பவம் சோதனை சாவடியில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முறையான காரணங்கள் இருந்தும் அனுமதி மறுக்கப்படுவதோடு, காவலர்களின் செயல் வேதனை அளிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்...


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad