தந்தையர் தின கவிதை
என் வாழ்க்கையின் நிரந்தர
கதாநாயகனே.!
நான் வியக்கும் விஞ்ஞானியே.!
என்னை நேர்படுத்தும்
நெறியாளனே.!
நான் பயிலும்
பல்கலைக்கழகமே.!
உன் தோள் மீது சாய்கையில் ஓராயிரம் தோழமை உணர்ந்தேன்.!
உன் கை பிடித்து நடக்கையில்
பத்தாயிரம் படை வீரரின்
பாதுகாப்பை உணர்ந்தேன்.!
உன் கண்டிப்பு எப்போதும் கசத்ததில்லை*
அதில் நீ கலந்த
கலப்படமில்லா அன்பாலே.!
கண நொடியும் நீ என்னை கவனிக்க தவறியதில்லை நான்
தவறிழைக்காமல் இருக்க.!
உன் சிறு இடைவேளையில் தரும்
பெரும் போதனையே
எனை புதுப்பிக்கிறது.!
உன் பாடசாலையில் நீ
ஊட்டிய பகுத்தறிவே
என் பாதி கண்ணை திறந்தது.!
பயில்கிறேன் மீதியையும் திறக்க.!
நான் பெற்ற வரம்
உன் பெருமனதில்
பெறாத மகனானேன்.!
வரமாய் வந்து
வாழ்வளித்த தந்தைக்கு,
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்..!
- *அன்புடன் மகன்*
தினேஷ்
No comments