Header Ads

  • சற்று முன்

    கோவை:சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் நள்ளிரவில் கடத்தல் என்று புகார்.

     

    கோவை வடவள்ளி ரோடு, இடையர்பாளையம், லூனா நகர், வித்யாகாலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன் (35) இவர் இந்து முதலியார் சமூகத்தை சேர்தவர்.   திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகரை  சேர்ந்த சுந்தராஜ் என்பவரின் மகள் சக்தி பிரபா (25) தேவேந்திரகுல வேளாளர் சமூகதை சார்ந்தவர். இவர்கள் இருவரும்  கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்பு தெரிவித்துள்ளனர். திருச்சியில் பெண்ணின் தந்தை உட்பட உறவினர்கள் காவல்துறையின் உயர் பொறுப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

     இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணின் பெற்றோர், அந்த பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்துவந்துள்ளனர். இந்நிலையில் கார்த்திகேயன்- பிரபா இருவரும் திருமண செய்து கொள்ள முடிவு செய்து கடந்த  5-6-2020 அன்று சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். முறைப்படி கோவை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில்  திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.  

    பின்னர் திருமணம் செய்து கொண்ட தகவலை இரண்டு வீட்டு பெற்றோருக்கும் தெரிவித்தனர். அதை பிரபாவின் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெரிவித்து திட்டியுள்ளனர். மணமகனின் பெற்றோர் இந்த திருமணத்தை முழு மனதுடன் ஏற்று கொண்டனர்.  இந்நிலையில் நேற்று இரவு பிரபா வின் பெற்றோர், உறவினர்கள் கோவையில் உள்ள கார்த்திகேயன் வீட்டிற்கு வந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தாயாரை கோடூரமான முறையில் தாக்கிவிட்டு பிரபாவை தூக்கி சென்றனர். திருச்சிக்கு கடத்தி சென்ற பிரபாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக  கார்த்திகேயன் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். 
     கார்த்திகேயனின் தாயார் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad