Header Ads

  • சற்று முன்

    சாத்தான்குளம்: சென்னை புறநகரில் வணிகர்கள் கடையடைப்பு

    சாத்தான்குளம் நீதிமன்ற காவலில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து சென்னை புறநகர் பகுதியில் வணிகர்கள் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இருவரையும் காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

     இருவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வணிகர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் சென்னை புறநகர் பகுதிகளான  அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் வணிகர்கள் கடைகளை  அடைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    இதுகுறித்து புறநகர் அனைத்து வணிகர் சங்கங்களின் தலைவர் துரைராஜ் பேசும்போது, “ கொரோனா என்கிற கொடிய வைரஸ் தாக்குதலில் வணிகர்கள் பெரும்பாதிப்பிற்கு ஆளாகியிருகின்றனர். இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை- மகன்  இருவரையும் காவல்துறையினர் கொலை செய்துள்ளனர். அந்த காவலர்களும் வணிகர்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தான் சம்பளம் பெறுகின்றனர் என்ற சிந்தனை இல்லாமல் இதுபோன்ற வெறித்தனமான செயலில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். 

     அதேபோல் ஆவடி நேரு பஜார் வணிகர் சங்கத் தலைவர் தாமோதிரன் கூறியதாவது, ”தந்தை- மகன் என இரண்டு வணிகர்களை காவல் நிலையத்தில் வைத்து கோடுரமாக தாக்கிய ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு காவலர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.” என்றார்.   

    அதேபோல், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகி அய்யாதுரை, “ காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கிய பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். காவல்துறையினர், மருத்துவர் என்று அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்” என்று தெரிவித்தார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad