மாவீரன் சேகுவேரா பிறந்தநாள்...
அனைத்து புரட்சியாளர்களும் செலுத்துகின்ற முதல் வணக்கம் சேகுவேரா-வுக்குத்தான். ஒவ்வொரு புரட்சியாளருக்கும், போராளிகளுக்கும், அநீதியை எதிர்த்துப் போராடுபவர்களுக்கும், சமத்துவத்தை விரும்புகின்ற அனைவருக்கும் ஞானத் தந்தையாக இருப்பது சேகுவேரா தான்.
அர்ஜென்டினாவில் பிறந்தவரான சேகுவேரா, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போருக்காகவும், தென் அமெரிக்க மக்களின் விடுதலைக்காகவும் தன் இன்னுயிரை முழுமையாக அர்ப்பணித்தவர். இன்று அந்த மாமனிதன் சேகுவேராவின் பிறந்த நாள்.
"ஒவ்வொரு அநீதிக்கு எதிராகவும் நீங்கள் பொங்குகிறீர்களா அப்படியானால் நீங்கள்தான் நான் - சே "(தோழன்)
"நாம் ஒன்றுக்காக சாகத் தயாராக இருந்தால்தான் அதற்காக வாழ முடியும்!"
"ஒரு காரியத்திற்கும் உதவாத எந்த வார்த்தையும் பயனற்றதே"
நீ என்னைக் கொல்ல வந்துள்ளாய் என்று எனக்குத் தெரியும். உடனடியாக அதைச் செய்து முடி.
(சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு சே-சொன்ன கடைசி வார்த்தை)
உண்மையான புரட்சி எது தெரியுமா? அன்புதான்... அன்பு உணர்வுதான் உண்மையான புரட்சிக்கு வித்து. அதுதான் புரட்சியை வழி நடத்தக் கூடிய சக்தி. அன்பு உணர்வு இல்லாத, நேச உணர்வு இல்லாத எந்தப் புரட்சியும் உண்மையானதாக இருக்க முடியாது.
எங்கெல்லாம் எதிரிகள் உள்ளனரோ, அங்கெல்லாம் நமது போரை எடுத்துச் செல்வோம். ஒரு முழுமையான போராக அது இருக்கட்டும். எங்கெல்லாம் நமது எதிரி இருக்கிறானோ, அங்கெல்லாம் தாக்குதலை தொடங்க வேண்டும் என்று எப்போழுதும் மக்களுக்காகவே வாழ்ந்தவர்.
ஒரு கொரில்லா போராளிக்கு மக்களின் ஆதரவு தேவை. அவன் எந்த மக்களுக்கு போராடுகிறானோ அந்த மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தப் போராளியும் வெற்றி பெற முடியாது. சேகுவேராவிற்கு மக்களின் ஆதரவு இருந்தது. அதனால் தான் அவர் வெற்றி பெற்றார்.
அவர் துயரங்களுக்கு எதிராக மட்டும் போராடவில்லை. ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் போராடினார்.
எப்போது ஒரு அரசு மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கிறதோ, (அது நேர்மையாக இருந்தாலும் சரி அல்லது மோசடியாக இருந்தாலும் சரி) அதற்கு எதிராக யாரும் போராட முடியாது. காரணம், அது மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அரசு...
வாழ்க புரட்சியாளர் சே குவேரா....
No comments