Header Ads

  • சற்று முன்

    திருவள்ளூர் :சோழாவரத்தில் கொரோனா அவசரகால கூட்டம் நடைபெற்றது


    திருவள்ளூர்: சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில்  கொரோனா அவசரகால ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்  ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லோகநாயகி தலைமையில் ஒன்றியக் குழுத் தலைவர் ராசாத்தி செல்வசேகரன்,  துணை தலைவர் கருணாகரன், ஊரக வளர்ச்சி உதவி செயற் பொறியாளரும் மண்டல அலுவலருமான பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் 
    கொரோனா அவசரகால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அலமாதி, விஜயநல்லூர், பாடியநல்லூர், சோழவரம், விச்சூர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    இக்கூட்டத்தில் கொரோனா நோயாளிகளின் நிலைமை, கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad