விழுப்புரம் எஸ். பி. தூத்துக்குடிக்கு மாற்றம்
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் என்று சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை இடமாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments