Header Ads

 • சற்று முன்

  ஆவடி மாநகராட்சியின் செயல்பாடு : மக்களின் கருத்து


  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு ஆவடி மாநகராட்சியின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் தான் இருந்தது. அதுவும் ஆணையராக திரு. ரவிச்சந்திரன் பொறுப்பேற்ற பின்னர் குப்பை எடுப்பதில் பொதுமக்கள் மத்தியில் ஒரு புரட்சியே உருவாக்கினார் என்று சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுமக்களே குப்பைகளை அகற்றும் அளவிற்கு விழிப்புணவை ஏற்படுத்தினார். அவர் ஆவடிக்கு வந்த குறுகிய காலத்தில் குப்பையே இல்லாத நகரமாக மாற்றி காட்டினார். 

  அதேபோல் தண்ணீர் பற்றாக்குறையை போக்குதல், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு முதன்மை சாலையில் புதிய கால்வாய் அமைத்தல் என்று அனைத்து பணிகளும் பாராட்டும்படியாகவே இருந்தது. ஆனால் மார்ச் மாதத்திற்கு பின்னர் அனைத்தும் தலைகீழானது. கொரோன வந்தது, அரசு அலுவலகங்கள் அனைத்தும் மர்ம தீவாக மாறிபோனது. மக்களுக்காக இயங்கிவந்த மாநகராட்சி நிர்வாகம் கொரோனா பெயரில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக கூறுகிறார் அரசியல் விமர்சகர் அந்தரிதாஸ், அவரிடம் மேலும் பேசும்போது, ஆவடி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனை நானே பாராட்டியிருக்கிறேன். ஆனால் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவிவரும் காலத்தில் மக்களுக்கு முதன்மையான தேவை நோய் பரிசோதனை மையம் தான். டாக்டர், செவிலியர்களை அதிகப்படுத்துவதுதான். அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை. சாலைகளை அடைப்பது, கிரிமினாசினி தெளிப்பது என்பதெல்லாம் கண்துடைப்பு என்றே கருதுகிறேன். இதுபோன்ற பணிகளால் நோய் பரவலை தடுக்க முடியாது. 
  ஆவடியில் உடனடியாக கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்று தி. மு. க. கூட்டணி கட்சிகளின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் எந்த ஊரிலும் நடைபெறாத பணி, இங்கே செய்து காட்டுவதுதான் நிர்வாக திறமையாக கருதமுடியும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் இலசை. கணேசன். மேல் அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டும் செய்வது நிர்வாக திறமை அல்ல. மேல் அதிகாரிகள் சொல்வதையும் கேட்டுக் கொண்டு இந்த ஊர் மக்களுக்கு என்ன அத்தியாவசிய தேவை என்று சிந்தித்து துணிச்சலாக பணியாற்றுபவர்களை தான் திறமையான நிர்வாகியாக பார்க்க முடியும். 

  அப்படி துணிச்சலான அதிகாரிகளை பார்பதே அரிதாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவி வரும் காலத்தில் மக்களின் உயிரை பாதுகாக்க என்னென்ன புதிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது?சென்னை அருகில் உள்ள ஆவடி மாநகராட்சியில் எத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது என்பதுதான் முக்கியமானது. மேல் அதிகாரிகளுடன் நியாயத்தை எடுத்து கூறி பரிசோதனை முகாம் அமைத்திருக்க வேண்டும். ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. மாறாக. 
  ...செலவு கணக்கு காட்டும் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக குற்றம்சாட்டுகிறார்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad