Header Ads

  • சற்று முன்

    கொரோனா தேவிக்கு தினமும் பூஜை: கேரளா நபர் வழிப்படுகிறார்

    கொரோனா தேவிக்கு' தினமும் பூஜை செய்து வழிபடும் கேரள நபர்
     
    15 ஜூன் 2020

    இந்து தமிழ் திசையில் வந்த செய்தி:

    உலகம் முழுதும் கொரோனா வைரஸைக் கண்டாலே கடும் அச்சம் நிலவிவருகிறது, தடுப்பு மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் என்று இதை ஒழிக்க மருத்துவ அறிவியல் துறை பாடுபட்டு வரும் நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர் கொரோனா தேவி என்று தன் பூஜை அறையில் கொரோனா பிம்பத்தை வழிபட்டு வருவதாக இந்து தமிழ் திசை செய்தி கூறுகிறது.

    கேரளா மாநிலம் கடக்கல்லில் உள்ள அனிலன் என்பவர் தனது இந்தப் பழக்கத்தை தன் வழியிலான விழிப்புணர்வுப் பிரசாரம் என்கிறார்.

    அவர் கூறும்போது, “கொரோனா வைரஸை பெண் கடவுளாக வணங்குகிறேன் தினமும் அர்ச்சனை செய்து பூஜை செய்கிறேன். இது எதற்காக என்றால் கொரோனா செயல்வீரர்களான சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருந்து, தடுப்பூசி கண்டுப்பிடிப்பில் இறங்கியிருக்கும் விஞ்ஞானிகளுக்காகவும்தான்” என்கிறார்.

    நெட்டிசன்கள் இவரைக் கடுமையாக கிண்டல் செய்தும், விமர்சித்து வந்தாலும் அசருவதாக இல்லை அனிலன். ”இது என்னுடைய தனிவழி, விழிப்புணர்வு வழி, ” என்கிறார் அவர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad