Header Ads

  • சற்று முன்

    எல்லையில் சீன ஊடுருவவில்லையா? சண்டை ஏன் நடந்தது? ப. சிதம்பரம் கேள்வி




    இந்திய-சீன எல்லையில் இருதரப்பு வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். நமது பாதுகாப்பு படையினர் நமது எல்லையை பாதுகாக்கும் முழு திறனுடன் உள்ளனர் என மோடி தெரிவித்தார். இந்த நிலையில் மோடியின் கருத்துக்கு ட்விட்டரில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய ராஜ்யசபா எம்பியுமான
     ப. சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இந்திய மண்ணில் எந்த வெளிநாட்டினரும் (சீனா) ஊடுருவவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அது உண்மையெனில் மே 5- 6 -ஆம் தேதிகளில் சீனா தேவையில்லாமல் வம்பு வளர்த்தது ஏன்? அன்றைய தினம் நடந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது?
    சண்டை ஏன்? ஜூன் 16-17 தேதிகளில் துருப்புகளிடையே சண்டை நிகழ்ந்தது ஏன், இந்தியாவில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தது ஏன்?. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த ஊடுருவலும் அத்துமீறலும் நடக்கவில்லை எனில் இரு தரப்பினரும் எல்லையில் குவித்த படைகளை திரும்ப பெற பேச்சுவார்த்தை நடந்தது ஏன்?

    சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நற்சான்று கொடுக்கிறாரா? அப்படியெனில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னவிருக்கிறது? மேஜர் ஜெனரல்களும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களே அதற்கு என்ன அர்த்தம்? என ப சிதம்பரம் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad