Header Ads

  • சற்று முன்

    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார் என்று நம்பவே முடியவில்லை :திரைதுறையினர் வேதனை

    இந்தி சீரியல்கள்  மூலம் நடிப்புலகில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்... பொறியியல் பட்டதாரியான இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக திரைத்துறைக்குள் நுழைந்தார். பின்னணி நடன கலைஞர், சிறு சிறு வேடங்கள் என கெரியரை தொடங்கிய சுஷாந்த், 'தேஷ் மேன் ஹாய் மேரா தில்' , ‘பவித்ர ரிஷ்தே’  போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார்.  2013-ம் ஆண்டு 'கை போ சே' (Kai Po Che) படம் மூலம் நாயகனாக பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி', 'பிகே', ‘கேதர்நாத்’ ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராக  வளர்ந்தார்.

    பல படங்களில் நடித்திருந்தாலும் 2016-ம் ஆண்டு வெளியான, இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் வரலாற்று படமான 'எம்.எஸ்.தோனி : தி அண்ட்லோட் ஸ்டோரி' திரைப்படம் இவரை பிரபலமாக்கியது. பல மொழிகளில் வெளியான இந்தப்படத்தின் மூலம், சுஷாந்துக்கு  இந்தியா முழுவதும் ரசிகர்கள் உருவாகினர். கடைசியாக இவர் நடித்து வெளியான  'சிச்சோரே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, அதில் சுஷாந்தின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும், இவர் நடிப்பில் உருவாகியிருக்கும்  'தில் பெசாரா' (Dil Bechara) படத்தின் வெளியீடு கொரோனா காரணமாக தள்ளி  வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட செய்தி திரையுலகினரை கவலையடையச் செய்துள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கிரிக்கெட் வீரர் தோனியின் பள்ளி வயதில் அவருக்குப் பயிற்சியளித்த கேஷவ் பானர்ஜி, சுசாந்த் சிங் பற்றி கூறியிருக்கிறார்.

    அதில், “மிகவும் நல்ல பையன் சுஷாந்த். மரியாதையாகப் பழகுவார். அவருடைய மறைவு செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. ராஞ்சிக்கு அவர் வந்தபோது நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். தோனியின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட்டை எனக்குக் கற்றுக்கொடுங்கள் என்று என்னிடம் கேட்டார். தோனி எப்படி விளையாடுவார், என்ன நினைப்பார் என தோனி பற்றி என்னிடம் நிறைய கேட்டார். படத்தில் மிகுந்த அக்கறை செலுத்தினார். தோனியை நன்கு தெரிந்துகொண்டு அவரைத் திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருந்தார். அதனால்தான் படமும் நன்றாக வந்தது. படத்தில் இருந்தவர் தோனி இல்லை என்று உங்களால் சொல்லமுடியாது” என்றார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad