நடிகர் சல்மான் கான் மீது குவியும் குற்றச்சாட்டு... நடிகை ஜியா கானின் தற்கொலை விவகாரத்தில் தலையிட்டார் என பரபரப்பு புகார்...
இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் இருக்கும் வாரிசு அரசியல் மற்றும் அதிகாரமிக்கவர்களின் அடக்குமுறை குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் சல்மான் கான் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோர் பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இந்தி பட உலகம் முன்னணி நடிகர்கள் சிலரின் கட்டுப்பாட்டில்
உள்ளது என்றும், அவர்கள் இளம் நடிகர்களை வளர விடுவதில்லை எனவும், சல்மான்
கானின் தபாங் பட இயக்குநர் அபினவ் கஷ்யப் குற்றம் சாட்டியிருக்கிறார்.
நடிகர் சல்மான்கான் மற்றும் அவரது சகோதரர்கள் தனது திரையுலக வாழ்க்கையை
நாசம் செய்து விட்டதாகவும், தனக்கு வந்த பட வாய்ப்புகளை தடுத்ததோடு, தன்னை
வைத்து படம் எடுக்க வந்தவர்களையும் மிரட்டினார்கள் என அபினவ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், “சுஷாந்த் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இது
விளையாட்டல்ல. பாலிவுட் மாறவேண்டும். பாலிவுட் உலகம் விழிப்படைய வேண்டும்.
பிறரைத் துன்புறுத்துவதை முற்றிலுமாகக் கைவிடவேண்டும். அதுவும் ஒருவகையில்
பிறரைக் கொல்வது போலத்தான்'' என்று ராபியா கான் கூறியுள்ளார்.
Jiah khan's mother talking about Nepotism #SalimKhan pic.twitter.com/OwIgvgsPJW
— Panakj Singh (@Pankaj241095) June 17, 2020
No comments