Header Ads

  • சற்று முன்

    வேலூரில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டியதால்; சிறுமி காவல் நிலையத்தில் தஞ்சம்


    கடந்த சில நாட்களாகப் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது என்பது தொடர்கதையாகி வருகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது வேலூரில் நடந்துள்ளது.

    வேலூரில் உள்ள விருத்தம்பட்டு காவல்நிலையத்துக்கு தனியாக வந்த 15 வயதாகும் 10 ஆம் வகுப்புப் படிக்கும் சிறுமி, சொன்ன தகவல்கள் போலிஸாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. அவர் சொன்ன தகவலின் படி அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு சிறுமி மறுத்துள்ளார்.

    அதனால் அவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது வலுக்கட்டாயமாக கையைப் பிடித்துக்கொண்டு தாலிக் கட்ட வைத்துள்ளனர். இதையடுத்து மறுநாள் காலை வீட்டை விட்டு ஓடிய அவர், விருத்தம் பட்டு காவல்நிலையத்துக்கு வந்துள்ளார். இதனை அடுத்து போலிஸார் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் அளித்தார்கள். அவர்கள் அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    இதற்கிடையே வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி, கர்ணாம்பட்டுப் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவைச் சேர்ந்த 17 வயது மாணவி, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி ஆகிய 4 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை ரகசியத் தகவலின் படி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.சிறுமிகளுக்குக் குழந்தை திருமணத்தை நடத்த முயன்ற பெற்றோரிடம் சமூக நலத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

     

     

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad