மதுரையில் ரூ 10 க்கு பசியை போக்கி வந்த ராமு தாத்தா இன்று காலமானார்; மதுரை மக்கள் சோகம்!!
1987ல் வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்ற ராமு தாத்தா, பொது மக்களுக்கு எதாவது ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இதன் வெளிப்படாக 1967ல் மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய உணவு கடை திறந்துள்ளார் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கிவந்த அவர். நாளடைவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க, 2, 5, 10 ரூபாய் என்று சாப்பாட்டின் விலையை உயர்த்தினார். இவருக்கு அவரது மனைவி பூரணத்தம்மாளும் உறு துணையாக இருந்துள்ளார்.
மதுரை மக்களின் இதயத்தில் மட்டும் இல்லாது அந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்பவர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் ராமு தாத்தா. அவர் வழங்கிய உணவின் விலை மிக மிக குறைவு என்பதுடன் அவரது உணவுடன் சேர்த்து அன்பும் பரிமாறப்படும். இந்த அன்பு மேலும் மேலும் அவரது கடைக்கு வாடிக்கையாளர்களை ஈர்த்தது.
No comments