+2 வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி; பத்திரிக்கையாளராக வேண்டும் என்பது லட்சியமாம்…
ஜார்கண்ட் மாநிலத்தில்
12 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன.
இந்நிலையில் நந்திதா ஹரிபால் என்னும் தையல்காரரின் மகள் மாநில அளவு முதலிடத்தை பிடித்து
சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவியின்
அம்மா வீட்டு பணிபெண்ணாக இருந்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி மற்றும் சகோதரன் உண்டு.
இவர் இந்த பொதுதேர்வில் மாநில அளவு முதலிடத்தை பிடித்துள்ளார் என்ற செய்தியை அறிந்தவுடன்
அளவுக்கடந்த மகிழ்ச்சியில் பொங்கி தனது மகளுக்கு இனிப்பு வழங்கி ஆனந்தம் அடைந்தனர்
இதுகுறித்து மாணவி நந்திதா பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது.
நான் இந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும். நான் மாநில அளவில் முதலிடம்
பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனையடுத்து தான் வருங்காளதில்
பத்திரிக்கையாளராக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று அவர் கூறினார்.
No comments