கொரோனா பலி 6 லட்சத்தை கடந்தது
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களிலும் பரவியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 5,93,388-ஆக இருந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நோய் பாதிப்பால் மேலும் 6,918 போ் பலியானதாக பல்வேறு நாடுகள் வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, சா்வதேச அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 6,00,226-ஆக அதிகரித்துள்ளது.
வேகமாக பரவும் கொரோனா
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை, கடந்த 100 மணி நேரத்தில் 10 லட்சம் அதிகத்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது, இதுவரை இல்லாத மிகத் வேகமான பாதிப்பு என்று கூறப்படுகிறது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கிய பிறகு, பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை அடைவதற்கு ஏறத்தாழ 3 மாதங்கள் ஆனது. ஆனால், நான்கே நாள்களில் 1.3 கோடியிலிருந்து 1.4 கோடியாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,42,31,367-ஆக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
No comments