நெய்வேலி என்எல்சி விபத்து: பலி 8 ஆக அதிகரிப்பு
விபத்து நடந்தபோது, 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த 16 பேர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் சிகிச்சை பெற்று வந்த என்எல்சி நிர்வாகி சிவக்குமார் என்பவர் கடந்த ஜூலை 3ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயதுடைய கூட்டுறவு பணியாளர் செல்வகுமார் உயிரிழந்துள்ளதாக என்எல்சி நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் என்எல்சி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments