Header Ads

 • சற்று முன்

  சென்னைக்கு காத்திருக்கும் அடுத்த பேரிடர்.!?  கனி, அம்பத்தூர்.

  கேள்வி  : கொரோனாவை பற்றி உங்கள் கருத்து?  

  பதில்: உலகின் மிகச்சிறந்த குத்து சண்டை வீரர் முகமது அலி. அவர் அமெரிக்காவில் 1942 சனவரி 17ல் பிறந்தார். அவர் கலந்து கொண்ட 61 போட்டிகளில் 56 வெற்றி பெற்றார். அவ்வளவு பெரிய மாவீரன். ஒரு கட்டத்தில் அவரை எதிர்த்து போட்டியிட ஒருவரும் முன்வரவில்லை. அந்த காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசு அறிவிக்கப்பட்டது. ஒரு இளைஞர் மட்டும் துணிச்சலாக முன் வந்தார். எல்லோரும் அந்த இளைஞரை பார்த்து முகமது அலியை எதிர்த்து நீ போட்டியிட வேண்டாம், அவருடைய ஒரு தாக்குதலுக்கு நீ தாங்க மாட்டாய் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அந்த இளைஞன் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். போட்டிக்கு தேதி குறிக்கப்பட்டது. 
  போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நண்பர்களிடம்  தன் வியூகத்தை விளக்கி, உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு நண்பர் முகமது அலி வீட்டிற்கு சென்று பூ கொத்துகள் கொடுத்து இந்த போட்டியிலும் நீங்களே வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். அவரும் சிரித்துக் கொண்டே புன்முறுவலோடு நன்றி தெரிவித்தார். அப்போது உங்கள் முகம் மிகவும் சோர்வாக இருக்கிறதே ஏதாகிலும் பிரச்சனையா என்று கேட்டார். அதெல்லாம் எதுவும் இல்லை என்று மறுத்தார் முகமது அலி. இல்லை.. இல்லை உங்கள் முகம் சோர்வாகத்தான் இருக்கிறது என்று கூறிவிட்டு சென்றான். அவ்வளவுதான் நடந்தது. அன்றைய நாள் முழுவதும் சோர்வு அவரை பிடித்துக் கொண்டது. அடுத்த நாள் காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞர் அனுப்பிய இன்னொரு நண்பர் வந்தார். முகமது அலியை சந்தித்து அவர் இதுவரை பெற்ற வெற்றிகளை அனைத்தும் வரிசையாக சொல்லி பாராட்டினார். கூடவே உங்கள் உடலில் சர்க்கரை நோய் போன்ற ஏதாகிலும் நோய் இருக்கிறதா என்று கேட்டார். அவர் இல்லையே என்றார். இல்லை உங்கள் முகத்தை பார்த்தால் ஏதோ நோய் இருப்பதை போன்று தெரிகிறது என்று சொல்லிவிட்டு அந்த இளைஞர் சென்றார். அதேபோல் மேலும் இரண்டு நண்பர்களை அந்த இளைஞர் அனுப்பி வைத்தார். அவ்வளவுதான் நடந்தது. போட்டியன்று முகமது அலிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, அதனால் அவர் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. 
  அதெபோல், காலையில் எழுந்து தொலைக்காட்சியை பார்த்தால் கொரோனா, பேப்பரை பார்த்தால் கொரோனாவில் இத்தனை பேர் இறந்து போனார்கள் என்ற செய்திகளே அதிகம். அதிகாரிகளின் நடவடிக்கையோ அதைவிட கொடூரம். இப்படித்தான் எல்லோரையும் பயமுறுத்தி, நோயாளியாக மாற்றி கொன்று வருகிறார்கள்.

  மாரி கணேஷ், ஆவடி.

  கேள்வி  : உங்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் உண்டா? 

  பதில் : ஆவடி சட்டமன்ற தொகுதியில் க.பாண்டியராஜன் வெற்றி பெற்றதும், சா.மு.நாசர் தோல்வியடைந்ததும் எப்படி  என்பதை, இப்போது வரை புரிந்துகொள்ள முடியவில்லை. 

  வெங்கடேசன், விருத்தாசலம்.

  கேள்வி : சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அ. தி. மு. க. விற்கு தலைமை ஏற்பாரா?  

  பதில்: வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கருதுகிறேன். சசிகலாவிற்கு சுமார் 70 வயது இருக்கும். நான்கு ஆண்டு காலம் சிறையில் இருந்தவர் உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்து போய்தான் இருப்பார். அதனால் ஓய்வு எடுக்கவே விரும்புவார்.

  மாலதி, அம்மாபேட்டை.

  கேள்வி  : முதலமைச்சர் பழனிசாமியின் செயல்பாடு எப்படி? 

  பதில்: எதிர்க்கட்சித் தலைவரும், நீதிமன்றமும் சேர்ந்து அவரை செயல்பட வைக்கிறார்கள் அவ்வளவே.. 

  சங்கீதா, கள்ளக்குறிச்சி.

  கேள்வி   அ.தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்? 

  பதில்: அதைப் பற்றி அந்த கட்சி தொண்டர்கள் கூட கவலைப்பட வில்லை.

  சரவணன்- பட்டாபிராம்.

  கேள்வி : ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா? மாட்டாரா?  

  பதில் : தமிழ்நாடு இப்போதே மோசமான நிலையை நோக்கித்தான் போய்கொண்டு இருக்கிறது. அதனால் கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ரஜினிக்கு தெரியும்.

  ரம்யா- திருமுல்லைவாயல் 

  கேள்வி  : ரஜினியும்-கமலும் இணைந்து படம் நடிப்பார்களா? 

  பதில்: இவர்கள் இருவரையும் நம்பி முதலீடு செய்து திவாலாவதற்கு எந்த தயாரிப்பாளர்களும் முன்வர மாட்டார்கள் என்று அவர்களுக்கும் தெரியும்.

  வீரமுத்து, சங்கராபுரம் 

  கேள்வி  : கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அதிகாரிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது? 

  பதில்: பரவாயில்லை. கீழ்மட்ட அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கிலும், உயர்மட்ட அதிகாரிகளுக்கு  கோடிக் கணக்கிலும் ஏதோ கிடைக்கிறது.

  இளையராஜா, சென்னை

  கேள்வி : சென்னையில் மீண்டும் ஒரு பெரும் வெள்ளம் வரும் என்று ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளதாமே?

  கொரோனாவில் இருந்தே இன்னும் மீண்டு வர முடியல.. அதுக்குள்ள அடுத்த பேரிடரா?? மக்கள் பாவம்.. 

  தினேஷ், பட்டாபிராம்

  கேள்வி : கொரோனாவுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் எப்படி இயங்கும்?? 

  பதில்: இது மிகவும் முக்கியமான கேள்வி. இன்னும் ஒரு வருடத்திற்கு கொரோனா நம்மை விட்டு போகாது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. அதனால் அதிகம் பாதிக்கப்பட போவது அரசு பள்ளிகளில் பயின்று வரும் கிராமப்புற ஏழை மாணவர்கள் தான். அவர்களால் ஆன்லைன் கல்வியும் பயில முடியாது.
  அதேபோல் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறையில் அமர வேண்டும் என்றால் அதற்கான ஆசிரியகளும், இடவசதியும் அரசுப் பள்ளிகளில் போதுமானதாகவும் இல்லை. அரசு என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை.

  உங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன..

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad