திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கைது!!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ இதயவர்மன். இவருடைய தந்தையும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான லட்சுமிபதிக்கும், செங்காடு பகுதியைச் சேர்ந்த இமையம் குமார் என்பவருக்கும், நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (11ம் தேதி) மாலை இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதால் இமயம் குமாருடன் வந்த ரவுடிகள் திடீரென எம்.எல்.ஏ இதயவர்மன் தந்தை லட்சுமிபதியையும், அவரது உறவினர் குருநாதனையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் லட்சுமிபதி தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டுள்ளார். அப்போது உடனிருந்த எம்.எல்.ஏ இதயவர்மனும் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில்
அவ்வழியேச் சென்ற தையூரைச் சேந்த கீரை வியாபாரி சீனிவாசன் குண்டு பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலில் காயம் அடைந்த லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் இருவரும் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனை
தொடர்ந்து பாதிக்கபட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ
இதையவர்மனை தேடிவந்தனர். ஆனால், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும்
திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மனுக்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என அவரது தந்தை
லட்சுமிபதி ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
இருப்பினும்
புகாரின்பேரில் எம்.எல்.ஏ இதயவர்மனை, சென்னை அருகே மேடவாக்கம் போலீசார் கைது செய்தனர்..
No comments